மீண்டும் களமிறங்கிய சிங்கம் அபிநந்தன் இப்போ பணி எங்கு தெரியுமா?

இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தானில் கைதான ஓவர்நைட்டில் இந்தியா முழுவதும் ஹீரோவாக மாறினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானத்தை துரத்திக் கொண்டு சென்ற அபிநந்தனின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாராசூட்டில் தப்பித்த அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் விழுந்ததால், பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானார்.

இந்திய அரசின் தலையீட்டை அடுத்து, சமாதான பேச்சுவார்த்தை நிமித்தமாக அபிநந்தனை பாகிஸ்தான் அரசு தாய் நாட்டுக்கு திருப்பி அளித்தது.

நாடு திரும்பிய அபிநந்தன், சில நாட்கள் விடுப்புக்கு பிறகு தற்போது மீண்டும் பணியில் அமர்ந்துள்ளார்.

ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணி செய்து வந்த அபிநந்தன் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரத்கர் விமானப்படை தளத்தில் கடந்த சனிக்கிழமை பணியமர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரத்கர் விமானப்படை தளத்தில் தனது பணியை ஏற்க வந்த ஹீரோ அபிநந்தனுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் பைனல்; கோப்பை யாருக்கு? 3 முறை தொடர் தோல்வி..! மும்பையை பழி தீர்க்குமா தோனி படை!AZ
More News >>