அந்த இடத்துல ஐஸ் வைக்கும் ஷாகித் கபூர்.. பாலிவுட்டுக்கு ஏத்த பலகாரம் ஆகுமா கபீர் சிங்!

தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டியின் அதிகாரப்பூர்வமான ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குநர் சந்திப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ளார். 2017ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி ஆந்திராவில் மட்டுமின்றி இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.

இந்நிலையில், தெலுங்கை விட ஹிந்தியில் மேலும் படம் பவர்ஃபுல் ஆக வர வேண்டும் என சந்திப் வாங்கா பல அடல்ட் விஷயங்களை வைத்துள்ளது டிரைலரிலேயே தெரிகிறது.

அதுவும் சாலையில் ஜூஸ் கடையில் இருந்து ஐஸ்ஸை எடுத்து பேன்ட்டுக்குள் விடுவதெல்லாம் உச்சபட்சம்.

அடுத்த மாதம் ஜூன் 21ம் தேதி கபீர் சிங் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கில் கிடைத்த வெற்றி ஹிந்தியிலும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் படமான கபீர் சிங்குக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

துருவ் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்ய வர்மாவின் நிலை தான் என்னவென்று தெரியவில்லை.

4 தொகுதிகள்...! 8 லட்சம் வாக்காளர்கள் ..! ஓட்டுக்கு ரூ.1000...! ரூ.80 கோடி பட்டுவாடா செய்த அமமுக
More News >>