அசைவ பிரியர்களே.. போட்டி குழம்பு செய்யலாம் வாங்க..

அசைவ பிரியர்களுக்கு பிடித்த போட்டி குழம்பு அல்லது குடல் குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த குடல் - அரை கிலோ

சின்ன வெங்காயம்

அரிசி - ஒரு பிடி

சோம்பு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

புளி - ஒரு எலுமிச்சைப்பழம் அளவு

தக்காளி - 2

தனியா - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

சீரகம் - 1 டீஸ்பூன்

கசகச - 1 டீஸ்பூன்

பட்டை - 5

கிராம்பு - 5

மிளகு - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் தனியா, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகு, பட்டை, கிராம்பு, அரிசி, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், கசகச ஆகியவற்றை வறுத்து அரைத்து பொடித்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் குடல் துண்டுகளை போடவும். கூடவே, வெங்காயம், தக்காளி விழுது, பச்சை மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து மூடிப்போட்டு 10 விசில் வரும் வரை வேகவிடவும்.

கலவை வெந்தப்பிறகு, புளிக்கரைசல் சேர்த்து கலந்து இன்னும் சில நிமிடங்கள் வேகவிடவும்.

ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கவலையில் கொட்டி கலந்துவிடவும்.சுவையான.. போட்டி குழம்பு ரெடி..!

More News >>