மணல் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி

போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மணல் லாரி ஒன்று வளைவில் திரும்பும்போது கவிழ்ந்ததில் அதில் பயணித்த தொழிலாளர்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் அலிராஜ்புர் மாவட்டம் அலாவா என்ற பகுதியில் உள்ள கிரமத்தில் இருந்து நேற்று மணல் லாரி ஒன்று 16 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலை வளைவில் திரும்பியபோது திடீரென லாரி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில், தொழிலாளர்களும் கீழே விழுந்து அவர்கள் மீது மணல் கொட்டியதால் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 8 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருன்றனர்.

More News >>