ரெஸ்டாரென்ட் ஸ்டைல் மீல் மேக்கர் கிரேவி ரெசிபி

வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மீல் மேக்கர் கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 100 கிராம்

தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் -1

தக்காளி - 3

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 3

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை தண்ணீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரைப் பிழிந்து மீல் மேக்கரை தனியாக எடுத்து அத்துடன், தயிர் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி தனியாக எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும். அதில், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் போட்டு கலக்கவும்.

அத்துடன், வெங்காயம் விழுது சேர்த்து வேக வைக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனைப் போன பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், மீல் மேக்கர், உப்பு, தண்ணீர் சேர்த்து கிளறி சுமார் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

இடையே, கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி மீண்டும் 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் சுவையான மீல் மேக்கர் கிரேவி ரெடி..!

More News >>