கமல்ஹாசனை ஆதரிக்கிறாரா ரஜினி? இந்து தீவிரவாதம் குறித்த கேள்விக்கு ரஜினியின் ரியாக்ஷன்!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் கூற விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

வரும் மே 19ம் தேதி அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளருக்கு வாக்குச் சேகரிக்க பிரசாரம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே என்றும் கூறினார்.

நாதுராம் கோட்சே குறித்து கமல் கூறியதால், கொந்தளித்த பாஜகவினர், கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவினரை விட ஒருபடி மேலே சென்ற அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பொங்கினார்.

இந்நிலையில், மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருந்த ரஜினிகாந்த், நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், இந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசனின் பேச்சு குறித்து கேட்டனர். ஆனால், அதுகுறித்து தான் பேச விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறிச் சென்றார்.

பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பம்; கமல் தான் தொகுத்து வழங்குகிறார்! போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
More News >>