ரத்தக் காயத்துடன் ஆடிய வாட்சன் அந்த ரன் அவுட் மட்டும் ஆகாமல் இருந்தால்?

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது.

இது மேட்ச் ஃபிக்சிங் என்றும், அம்பானி காசு கொடுத்து கோப்பையை வாங்கி விட்டார் என்றும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க இன்னொரு புறம், போட்டியில் தோனியின் ரன் அவுட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கிரிக்கெட் ஆட்ட விதிப்படி, பேட்ஸ்மேனுக்கே சாதகமாக கூறவேண்டும் என்ற விதியும் தோனிக்கு எதிராக ஆனது ஆட்டத்தின் போக்கை மாற்றும் காரணமாக இருந்தது. தோனியின் அவுட் குறித்த சர்ச்சை இன்னமும் தொடர்கிறது.

இதற்கிடையே, அதே போட்டியில் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் எடுத்த வாட்சன் ரன் அவுட்டானது சென்னை அணி கோப்பையை பறிகொடுக்க மேலும் ஒரு முக்கிய காரணம் ஆனது.

வாட்சனும் வேண்டுமென்றே மலிங்காவின் கடைசி ஓவரில் அவுட் ஆனார், என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹர்பஜன் சிங், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வாட்சன் காலில் ரத்தம் வழியும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ரன் ஓடும் போது, இடறி விழுந்த வாட்சன் காலில் ரத்தம் வழியத் தொடங்கியது. அதனையும் பொருட்படுத்தாது, இறுதி வரை போராடிய வாட்சன், போட்டி முடிந்த பின்னர் அவரது காலுக்கு 6 தையல் போட்டுள்ளார் என்ற பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி அறிந்த சென்னை அணி ரசிகர்கள், தற்போது, வாட்சனை பாராட்டி வருகின்றனர்.

4வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்த மும்பை இந்தியன்ஸ் - சென்னையின் கனவை தகர்த்த மலிங்கா
More News >>