சன்னி லியோனுக்கு கடைசி ஆளாக வாழ்த்து கூறிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்!
நடிகை சன்னி லியோன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது வாழ்த்துகளை நடிகை சன்னி லியோனுக்கு சமூக வலைதளம் மூலமாக தெரிவித்தார்.
ஆபாச நடிகையாக இருந்து பின்னர், பாலிவுட் நாயகியாக மாறிய நடிகை சன்னி லியோனுக்கு நேற்று 38வது பிறந்த நாள். சன்னி லியோனின் பிறந்த நாளுக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை கூறினர்.
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகரான அமீர்கான், கடைசி ஆளாக நேற்று இரவு 11.30 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சன்னி லியோனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறினார். மேலும், இந்த ஆண்டு உங்களுக்கு பல வெற்றிகள் குவிய வாழ்த்துகள் என்றார்.
சன்னி லியோன், வட இந்தியாவை தாண்டி தற்போது தென்னிந்திய மொழிப் படங்கள் மீதும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மம்மூட்டியின் மதுர ராஜா படத்தில் மோக முந்திரி பாடலுக்கு சமீபத்தில் அசத்தல் நடனம் போட்ட நடிகை சன்னி லியோன், ரங்கோலி எனும் மலையாள படத்திலும், வீரமாதேவி எனும் தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
டைப்போ எரர் பரிதாபங்கள்: 40 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களில் எழுத்துப் பிழை!