மோடி.. மோடி... என கோஷமிட்ட பாஜகவினர்..! கைகுலுக்கி ஆச்சர்யப்படுத்திய பிரியங்கா..!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சார ஊர்வலம் சென்ற போது, பாஜகவைச் சேர்ந்த ஒரு கும்பல் மோடி, மோடி என உரக்கக் கூச்சலிட்டனர். இதனால் காரை நிறுத்தி இறங்கிய பிரியங்கா சிரித்த முகத்துடன் பாஜகவின் ருடன் கைகுலுக்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
ம.பி.மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியில் கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறும்
வரும் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உ.பி.பகுதியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ம.பி.மாநிலத்திற்கு சென்றுள்ள பிரியங்கா காந்தி இந்தூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ம.பி.மாநில முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் சகிதம் இந்தூர் நகர சாலைகளில் காரில் ஊர்வலமாகச் சென்று பிரியங்கா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது சாலையின் ஓரமாக கும்பலாக திரண்டிருந்த பாஜகவினர், பிரியங்கா வருவதைப் பார்த்தவுடன், மோடி.. மோடி.. என பிரதமர் மோடி ஆதரவு கோஷங்களை உரக்க எழுப்பினர். அப்போது திடீரென காரை நிறுத்தச் சொன்ன பிரியங்கா, விடுவிடுவென , பாஜகவினர் திரண்டிருந்த இடத்திற்குச் சென்றார். சிரித்த முகத்துடன் பாஜகவினரின் கைகளைப் பிடித்து கை குலுக்கி, அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
அத்தோடு மட்டுமின்றி நீங்கள் உங்களுடைய கட்சி வேலையை நன்றாக பார்ப்பது போல், நானும் என் கட்சிப் பணிகளை மேற்கொள்கிறேன் என்று கூறி பாஜகவினரை தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார்.
பிரியங்காவின் இந்த அதிரடியால் நடந்தது கனவா?நனவா? என்ற பிரமிப்பில் இருந்த பாஜகவினரும் பதிலுக்கு பிரியங்காவுக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்த சம்பவம்சுப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி என்றே கூறலாம்.
மோடி வெறும் முகமூடி தானா...? கிழிந்தது திரை... கலக்கத்தில் பாஜக!