ருசித்தால் சும்மா அப்படி இருக்கும்.. கடம்பா மீன் வறுவல் ரெசிபி

மீன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மீன்களில் ஒன்று கடம்பா வகை மீன். முள் இல்லாத இந்த மீன் சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதனால், இப்போ கடம்பா மீன் வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கடம்பா மீன் - 10

சின்ன வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

சீரகத் தூள் - கால் டீஸ்பூன்

தனியாத் தூள் - அரை டீஸ்பூன்

எலுமிச்சைப் பழம் ஜூஸ் - கால் பகுதி

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு

செய்முறை:

முதலில் கடம்பா மீன்களை சுத்தம் செய்து வட்டமாக சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாயத்தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியாத் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, தேவைப்பபட்டால் இரண்டு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை கடம்பா மீனில் சேர்த்து நன்றாக கலந்து சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அத்துடன், மசாலாவில் ஊற வைத்த கடம்பா மீனை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் இடையில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

கடம்பா மீன் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால், அதனை சுமார் 5 முதல் 8 நிமிடங்கள் வரை வறுத்தால் போதும். இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான கடம்பா மீன் வறுவல் ரெடி..!

More News >>