தென்னிந்திய ஸ்பெஷல் தேங்காயப்பால் இறால் குழம்பு ரெசிபி
அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறாலில், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்பெஷல் குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
இறால் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 10 பல்
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்
புளி கரைசல் - அரை கப்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை
உப்பு
செய்முறை:
முதலில் இறாலை நன்று சுத்தம் செய்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
அத்துடன், வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கூடவே, பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்த வதக்கவும்.
தக்காளி வெந்ததும், இறால் சேர்த்து கிளறி வேகவிடவும். இறால் பாதி வெந்ததும் குழம்பு மிளகாய்த்தூள், மிளகுத் தூள், புளிகரைசல் சேர்த்து நன்றாக கிளறி சுமார் 5 நிமிடங்களுக்கு மிதமான சூட்டல் வேகவிடவும்.
குழம்பு கொதிவந்தப்பிறகு, தேங்காயப்பால் சேர்க்கவும். தேவைப்பட்டால் உப்பு பார்த்து சேர்த்து கிளறி 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான இறால் குழம்பு ரெடி..!