திருப்பதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து 10பேர் காயம்
திருப்பதி திருமலைக்குச் செல்லும் வழியில் திடீரென அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
திருப்பதியிலிருந்து திருமலை எனும் மேல் திருப்பதிக்கு செல்லும் ஆந்திர அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பேருந்து சாலையை கடந்து மரத்தின் மீது மோதிக் கொண்டிருப்பதை கவனித்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள், மற்றும் அந்த இடத்துக்கு அருகே இருந்தவர்கள், விரைந்து செயல்பட்டதால், பேருந்தில் இருந்த அத்தனை பேரும் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவுமில்லை. 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரங்களுக்கு இடையே அரசு பேருந்து சிக்கிக் கொண்டதால், மலைப் பாதையில் இருந்து கீழே விழாமல் தப்பித்தது.
திருப்பதி ஏழுமலையானின் கிருபை தான் தங்களை காப்பாற்றியதாக பக்தர்கள் கூறிவிட்டு, தரிசனத்தைக் காண சென்றனர்.
10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணுக்கு என்ன கொடுமை நேர்ந்தது தெரியுமா?