எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது..! கமல் பேச்சு குறித்து பிரதமர் மோடி கருத்து
எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் கூறியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. கமலுக்கு எதிர்ப்பு, கண்டனம் ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில் அவர் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கமல் பேசியது குறித்து பிரதமர் மோடியும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கூறுகையில், இந்து மதம் அமைதியைப் போதிக்கிறது. ஒருவரை காயப்படுத்தவோ, கொல்லவோ இந்து மதம் அனுமதிப் பதில்லை. இதனால் எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. அதையும் மீறி இந்து மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதியாக இருந்தால் அவன் உண்மையான இந்து அல்ல என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் கொடைக்கானலில் தங்கியிருந்தார். இன்று நண்பகல் கொடைக்கானலில் இருந்து காரில் மதுரை புறப்பட்டார். இன்று மாலை இடைத் தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றத்தில் கமல் பிரச்சாரம் செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரை செல்லும் கமல், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பாரா? அல்லது இன்றும் கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டு சென்னைக்கு விமானத்தில் பறந்து விடுவாரா? என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.
வெறுப்பு காட்டுவதை விட, அன்பே வெற்றி தேடித் தரும் - ஓட்டளித்த பின் ராகுல் உற்சாகம்!