கமலுக்கு எதிரான பாஜக வழக்கு...! தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் !
இந்து தீவிரவாதி என்று ம்க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசியதற்கு எதிராக பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவன் பெயர் கோட்சே என்றும் நடிகர் கமல் பேசியது, பாஜக தரப்பை கொந்தளிக்கச் செய்துள்ளது. கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம், விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன், அவருக்கு எதிராக போலீசில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என பாஜகவினர் வேகமாக செயல்பட்டு வருகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் உயர் நீதிமன்றத்தில், கமலுக்கு எதிராக நேற்று வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று அவசரமாக விசாரணைக்கு வந்த போது ஆரம்ப கட்டத்திலேயே வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். மனுவை உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை எனவும், தமிழகத்தில் நடந்த சம்பவத்துக்கு தமிழக நீதிமன்றத்தில் தான் வழக்குத் தொடுக்க முடியும் என்று கூறி அஸ்வினி உபாத்யாயாவின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.