சுவையான மீல் மேக்கர் பொடிமாஸ் ரெசிபி
முட்டையில் பொடிமாஸ் செய்து சுவைத்திருப்பீங்க.. இப்போ மீல் மேக்கர் வெச்சி பொடிமாஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 20
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3
வெங்காயம் - ஒன்று
குழம்பு மசாலா பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
வேக வைத்த கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து வறுத்து பின்னர் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதேபோல், ஊறவைத்த மீல் மேக்கரை நன்றாகப் பிழிந்து கொறு கொறுப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும், குழம்பு மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு, அரைத்து வைத்த மீல் மேக்கரை சேர்த்து கிளறிவிடவும். அதற்குள், முட்டையை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து மீல் மேக்கருடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக வேக வைத்த கடலை பருப்பு, கொத்தமல்லித்தழை தூவி கிளறி 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மீல் மேக்கர் பொடிமாஸ் ரெடி..!