விளையாட்டுக்குக்கூட நெகட்டிவ் வேண்டாம் இளம்பெண்ணின் உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் போலிங்!

இன்ஸ்டாகிராமில் தான் வாழ வேண்டுமா? அல்லது சாக வேண்டுமா என கருத்துக் கேட்ட இளம்பெண்ணுக்கு பலரும் சாக வேண்டும் என பதில் அளித்ததால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மலேசியாவை சேர்ந்த 16வயது இளம்பெண் டேவியா எமிலியா மன வருத்தத்துடன் இருந்துள்ளார். தான் வாழ வேண்டுமா? அல்லது சாகவேண்டுமா? என்பதை தனது இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்கள் முடிவு செய்யட்டும் என ஒரு போல் நடத்தியுள்ளார். அந்த கருத்துக் கேட்பில் 69 சதவீதம் பேர் அந்த இளம்பெண்ணை சாகுமாறு கோரியுள்ளனர்.

இதனால், விரக்தியடைந்த அந்த இளம்பெண், கிழக்கு மலேசியாவில் உள்ள சரவாக் எனும் கட்டத்தின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

அவரது மரணம் குறித்த செய்தி அறிந்த அவரது உறவினர், இன்ஸ்டாகிராமில் நீங்கள் அளித்த எதிர்மறையான வாக்கினால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் என பதிவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த ஆசியா- பசிபிக் இன்ஸ்டாகிராம் தலைவர் வாங் சிங் யீ, அந்த இன்ஸ்டாகிராம் போலிங் அடுத்த நாள் முடிவடையும் நிலையில், 88 சதவீதம் பேர் அந்த பெண் உயிர் வாழ வேண்டும் என பதிவிட்டதாகக் கூறி, அந்த இளம்பெண் குடும்பத்தாருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்தார்.

பெண்ணின் இறப்பு செய்தி அறிந்த பின்னரே, போலிங் மாறியுள்ளது என இன்ஸ்டாகிராமிற்கு எதிராக மலேசியாவில் இளைஞர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற துபாய் ஃபிரேம்!
More News >>