என்னது கோட்சே தேச பக்தரா? பாஜக வேட்பாளரின் அதிரடி கருத்தால் கிளம்பிய புது பூதம்!
தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றும், அவரை தேசத் துரோகி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் நடத்திய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கோட்சே குறித்துக் கூறினார். இதற்கு பாஜக தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியது கண்டனத்துக்குரியது என வழக்குகளையும் தொடுத்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரங்களை தடை செய்ய தொடுத்த வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடியும் செய்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய பிரதேசம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங், நாதுராம் கோட்சேவை ஒரு சிறந்த தேச பக்தர் என்றும், அவரை தீவிரவாதி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தருவோம் எனக் கூறினார்.
இவரது சர்ச்சைக்குரிய பேச்சு ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவரது பேச்சைக் கண்டித்துள்ள பாஜக மேலிடம், பொதுவெளியில் பிரக்யா சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
கமல் பிரச்சாரத்திற்கு தடையா..? - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!