ரெஸ்டாரென்ட் ஸ்டைல் மிளகு நெய் மீன் வறுவல் ரெசிபி
வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிளகு நெய் மீன் வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நெய் மீன் - அரை கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
தனியா - அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
சோம்பு - அரை டேபிள் ஸ்பூன்
மிளகு - முக்கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை
நெய்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் மீன் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். இந்த மீன் துண்டுகளை வாழை இலையில் போட்டு நான்கு பக்கமும் மடித்து வைத்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில், மல்லி, மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடிக்கவும்.
மற்றொரு வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.கூடவே, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு, காஷ்மீரி மிளகாயத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
இந்நிலையில், மீன் துண்டுகளை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வேகவிடவும்.
மீன் துண்டுகள் நன்றாக வறுப்பட்டதும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.சுவையான மிளகு நெய் மீன் வறுவல் ரெடி..!