கமகமக்கும் வறுத்த மீன் கிரேவி ரெசிபி

வித்தியாசமான சுவையில் வறுத்த மீன் கிரேவி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப்போறோம்..

தேவையான பொருட்கள்:

மீன் - 15 துண்டுகள்

மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தேங்காய்ப் பால் - ஒரு கப்

புளி கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 5

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லித்தழை

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் மீன் துண்டுகள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலக்கி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு, இந்த மீன் துண்டுகளை கடாயில் போட்டு அரை வேக்காடாக வறுத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி ஆறவைத்து பிறகு, மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் விழுது, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் அரைத்த தக்காளி விழுது, பச்சை மிளகாய், மிளகாயத்தூள் கறி«விப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக கலந்து வேக வைக்கவும்.

பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க வைத்ததும் வறுத்த மீன்களை சேர்த்து கிளறி சிறிது நேரம் வேகவிடவும்.

இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் அது தான் சுவையான மீன் கிரேவி.அவ்ளோதாங்க.. சுவையான வறுத்த மீன் கிரேவி ரெடி..!

More News >>