டெல்ரோல், டீசல் விலையில் மாற்றம்
சென்னை: ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் ஏறிவந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை 6 மணி முதல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. இதில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.66 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், பெட்ரோலின் நேற்றைய விலையை விட 1 பைசாவும், டீசலில் 7 பைசாவும் குறைந்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.