பொரி உருண்டை செய்வது எப்படி..?

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொரி உருண்டை வீட்டிலேயே சுகாதாரமா எப்படி செய்யாதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பொறி - 3 கப்

வெல்லம் - ஒரு கப்

ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.அதனுடன் ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.

வெல்லம் பாகுவாக மாறிய உடன் பொரியை எடுத்து மெதுவாக அளந்து சேர்த்து கலக்கவும்.

வெல்லப்பாகில் நன்றாக கலந்தவுடன் மிதமான சூட்டில் உருண்டை பிடித்தால் இனிப்பான பொரி உருண்டை தயார்..!

More News >>