சுவையான கோதுமை ரவை உப்புமா ரெசிபி

உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமை ரவை உப்புமா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

காய்ந்த மிளகாய் - ஒன்று

வெங்காயம் - ஒன்று

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு

செய்முறை:

ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும்.

பின், ஒரு கப் ரவைக்கு இரண்டரை கப் என்ற அளவுக்கு தண்ணீரை ஊற்றவும்.

கொதித்தவுடன் கோதுமை ரவையை மெல்ல கொட்டி நன்றாக கிளறி வேக வைக்கவும். கூடவே தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

கோதுமை ரவை வெந்து உப்புமா பதத்திற்கு வந்ததும் சுடச்சுட பரிமாறலாம்..அவ்வளவுதாங்க சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி..!

More News >>