மத்திய அரசின் நிதியைவிட பாகுபலி வசூல் அதிகம்: எம்.பி கிண்டல்

மத்திய அரசு அளிக்கும் நிதியைவிட 'பாகுபலி' திரைப்படத்தின் வசூல் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதேவ் கல்லா விமர்சித்துள்ளார்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கண்டனங்களையும் எதிர்மறை விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பா.ஜ.க-வின் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் மத்திய ஆளுங்கட்சிக்கு எதிராக அதிகளவில் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றன.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய ஆளுங்கட்சி முந்தைய காங்கிரஸ் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தது. இதையடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஆளும் பா.ஜ.க-வின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆந்திர மாநில எம்.பி ஜெயதேவ் கல்லா பேசுகையில், "கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு மக்களுக்காக எந்த நலத்திட்டத்தையும் நிறைவேற்றவே இல்லை. ஆந்திரா மாநிலத்துக்காக மத்திய அரசு அளித்த வளர்ச்சி நிதியைவிட 'பாகுபலி' திரைப்படத்தின் வசூல் அதிகம்" என விமர்சித்தார்.

More News >>