திரிணாமுல் கட்சி பெண்கள் முகத்தை மூடி கள்ள ஓட்டு போடுறாங்க ..! - அலறும் பாஜக வேட்பாளர்..!

மே.வங்கத்தில் திரிணாமுல் கட்சியின் பெண் தொண்டர்கள் முகத்தை துணியால் மூடியபடி கள்ள ஓட்டு போடுவதாகவும், முக அடையாைளத்தை காண்பிக்கச் சொன்னால் வம்புச் சண்டைக்கு வருகிறார்கள் என்று பாஜக வேட்பாளர் ஒருவர் அலறியுள்ளார்.

கடைசிக் கட்டமாக 59 மக்களவைத் தொகுதி களில் நடைபெறும் தேர்தலில், மே.வங்க மாநிலத்தில் 9 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும் இடையே அடிக்கடி மோதல் நட்பபது சகஜமாகி விட்டது. கடைசிக் கட்டத்தில் கடந்த செவ்வாயன்று கொல்கத்தாவில் அமித் ஷா தலைமையில் நடந்த பாஜக பிரச்சார பேரணியில் பெரும் வன்முறையே வெடித்து விட்டது. இதனால் இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மே.வங்கத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாதுகாப்புக்கு கூடுதல் படையினர் குவிக்கப்பட்டனர். ஆனாலும் சில இடங்களில் பிரச்னை வெடிக்கத்தான் செய்துள்ளது. ஜாதவ் பூர் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் திரிணாமுல் கட்சியினர் கள்ள ஓட்டுப் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து ஜாதவ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான அனுபம் ஹஸ்ரா என்பவர் கூறுகையில், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பெண்கள் துணியால் முகத்தை மூடிக் கொண்டு கள்ள ஓட்டு போடுகின்றனர்.வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிடுவதற்கு முக அடையாளத்தை காண்பிக்கச் சொன்னால் மறுப்பு தெரிவிக்கின்றனர். முகத்தை மறைத்தபடி வாக்களிக்க வருபவர்களை எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை செய்தால் பிரச்னை எழுப்பி தகராறு செய்கின்றனர் என்று புகார் வாசித் துள்ளார்.

More News >>