ஒன்றல்ல, இரண்டல்ல 400 முறை: நம்ம தல தோனியின் சாகசம் தெரியுமா?
இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட்கீப்பர் என்ற பெருமையை அடைந்துள்ளார் 'தல்' தோனி.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நடசத்திரக் கேப்டன் மகேந்திர சிங் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் தனது வழக்கமான அதிரடியால் பட்டையைக் கிளப்பி வருகிறார். சாதனை மேல் சாதனைகளைப் பதிவு செய்து வரும் தோனி நேற்று நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனையை எட்டியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் சரித்திரத்தில் அதிகளவிலான விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட்கீப்பர்கள் வரிசையில் முதல் இடத்தை எட்டியுள்ளார் தோனி. அதாவது இதுவரையில் 400 விக்கெட்டுகளை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பெற்றுள்ளார் தோனி. மேலும் சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையயும் தோனி பெற்றுள்ளார்.
'தல' நீங்க கலக்குங்க..!