என்னதான் நடக்கிறது மாலத்தீவில்? அமைதி திரும்ப உலக நாடுகள் முயற்சி

அரசியல் நெருக்கடியால் குழப்பத்தில் தவித்து வருகிறது இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான மாலத்தீவுகள். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் மாலத்தீவுகளில் அமைதி மீள வேண்டுமென ஐ.நா உள்ளிட்ட உலக நாடுகள் விரும்புகின்றன.

மாலத்தீவுகளில் அந்நாட்டு அதிபருக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே நிலவிய குழப்பங்கள் அந்நாட்டின் ஆட்சி களையும் நிலை வரை மோசமாகியுள்ளது. மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லாவுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களே செயல்பட்டதையடுத்து அந்த உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். இதனால் அதிபரின் ஆட்சிக்கு முடிவு ஏற்படும் நிலை உருவானது. நெருக்கடியை சமாளிக்க மாலத்தீவுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதையடுத்து எதிர்கட்சிகளின் தலைவர், அந்நாட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட நாட்டின் முக்கிய, உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர்.

அவசர நிலையை எதுர்த்தும் ஆளுங்கட்சியின் அராஜப் போக்கைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாலத்தீவுகளில் அமைதி நிலவ வேண்டும் என ஐ.நா சபை விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் மாலத்தீவுகளில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

 

More News >>