மோசடி கருத்துக் கணிப்பை புறந்தள்ளுங்க... ஓட்டு எண்ணிக்கையில கவனமா இருங்க...! உஷார்படுத்தும் டிடிவி தினகரன்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ள நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளி வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியினரை உஷார்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டு எதிர்க்கட்சிகளிடையே ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்திவிட்டன. பாஜக தான் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று ஒட்டுமொத்த கணிப்புகளும் கூற, அதனை எதிர்க்கட்சிகள் நம்பத் தயாராக இல்லை. தமிழகத்திலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் அதிமுக கூட்டணிக்கும் கணிசமான இடங்கள் கிடைக்கும் என்று கூறும் இந்தக் கணிப்புகள், அமமுகவுக்கு பூஜ்யம் தான் கிடைக்கும் என்று கூறியுள்ளன. இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை வளைத்து, தங்களுக்குச் சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்தவர்களே இப்போது அடுத்த காரியத்தையும் கூசாமல் செய்திருக்கிறார்கள்.
எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தும், வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பது புரிந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அடுத்த புரட்டை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
இது மோசடியான கருத்துக் கணிப்பு என்பதற்கு ஒரு உதாரணமாக, தமிழ் தொலைக்காட்சி ஒன்று, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தினோம் என்று வெளியிட்டது. அதில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு (மக்கள் நீதி மய்யம்) அதிகபட்சமாக ஆறு சதவிகிதம் வாக்களித்ததாக மக்கள் சொன்னார்கள் என்று சொல்லப்பட்டது. நிஜம் என்ன தெரியுமா? அந்தக் கட்சி, அந்தத் தொகுதியில் போட்டியிடவே இல்லை. வாக்கு இயந்திரத்தில் இல்லாத ஒரு பட்டனை அழுத்தி எப்படி மக்கள் வாக்களித்திருப்பார்கள்? என்பது கூட தெரியாமல் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். இந்தத் தவறு நடந்து விட்டது என்ற உண்மை தெரிந்தவுடன் அந்த 6% வாக்குகளை பிரதான கட்சிகள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்து சரிக்கட்டியிருக்கின்றனர்.
இது போன்றுதான், மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளி வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று டிடிவி தினகரன் தனது கட்சியினரை உஷார்படுத்தியுள்ளார்.
அப்போ 20.. இப்போ 2000...! ஆர்.கே.நகர் பாணியில் அரவக்குறிச்சியிலும் டோக்கனா..? அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர் புகார்