மீல் மேக்கரில் கோலா உருண்டை செய்யலாம் வாங்க..

சைவ பிரியர்களுக்கு பிடித்த மீல் மேக்கரில் கோலா உருண்டை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் & 100 கிராம்

சின்ன வெங்காயம் & 7

பொட்டுக் கடலை & 3 டீஸ்பூன்

துருவிய தேங்காய் & 5 டீஸ்பூன்

பச்சை மிளகாய் & 1

இஞ்சி பூண்டு விழுது & 1 டீஸ்பூன்

முந்திரி பருப்பு & 6

மிளகாய்த்தூள் & 1 டீஸ்பூன்

கரம் மசாலா & கால் டீஸ்பூன்

சீரகம் & அரை டீஸ்பூன்

சோம்பு & கால் டீஸ்பூன்

புதினா

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

முதலில், மீல் மேக்கரை வெந்நீரில், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பிழிந்து மிக்ஸி ஜாரில் திரிதிரியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம் சேர்த்து பொரிக்கவும்.

அத்துடன், முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை சேர்த்த வறுக்கவும்.கூடவே, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும், பதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தற்போது, தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையை எடுத்த ஆரவைத்து பின், மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மசாலா கலவையுடன், மீல் மேக்கரை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

வாணலியில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான மீல் மேக்கர் கோலா ரெடி..!

More News >>