தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்!
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அடிக்கடி சீருடைகளின் வண்ணங்களை கல்வித்துறை மாற்றம் செய்து வருகிறது. தற்போது அடுத்த மாதம் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் புதிய சீருடைகளை அறிமுகம் செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறுகையில், வரும், 2019-20-ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகம் ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய பள்ளிச் சீருடைகள், மாணவ, மாணவியரின் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.