ஓட்டுப் பெட்டிகளுக்கு விடிய, விடிய காவல்! பா.ஜ.க. மீது திரிணாமுல் பயம்!!

மேற்கு வங்கத்தில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விடிய, விடிய காவல் காத்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், கம்யூனிஸட், பா.ஜ.க. கட்சிகள் தலா 2 இடங்களையும் கைப்பற்றின. இந்த முறையும் அதே அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று மம்தா நினைக்கிறார். காரணம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களால் மோடிக்கு எதிராக மக்கள் இருப்பார்கள் என அவர் எதிர்பார்க்கிறார்.

ஆனால், அங்கு திரிணாமுல் காங்கிரசின் அடக்குமுறைகளுக்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அடங்கி போய் விட்டதால், பா.ஜ.க. நன்கு வளர்ந்தது. மத்தியில் ஆட்சியில் உள்ளதால் பா.ஜ.க.வினர் துணிச்சலாக மம்தாவை எதிர்கொண்டனர். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கு இம்மாநிலத்தில் 14 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், திரிணாமுல் கட்சிக்கு 26 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பா.ஜ.க. அணி 300 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டது.இதைப் பார்த்த மம்தா பானர்ஜி, இந்த கணிப்புகள் பொய் என்றும், பா.ஜ.க.வினர் ஓட்டு எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு செய்யப் போகிறார்கள் என்றும் ட்விட் போட்டார். அத்துடன், தனது கட்சிக்காரர்களுக்கு ஓட்டு எந்திரங்கள் உள்ள மையங்களில் காவல் காக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஞாயிறு இரவு முதல் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் திரிணாமுல் தொண்டர்கள் விடிய விடிய காவல் காத்து வருகின்றனர். இது குறித்து உணவு துறை அமைச்சர் தபான் தாஸ்குப்தா கூறுகையில், ‘‘ஏற்கனவே மே 16ம் தேதி பிரச்சாரத்தின் போதே முதல்வர் மம்தா, ஓட்டு எந்திரங்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு கூறியிருந்தார். இப்போது பா.ஜ.க. 300 இடங்கள் பிடிக்கும் என்று கணிப்புகள் வந்துள்ளதைப் பார்த்தால் எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு செய்ய பா.ஜ.க. முயல்வதாக தெரிகிறது. எனவே, எங்கள் தொண்டர்கள் காவல் காக்கிறார்கள் என்றார்.

கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலை உடைப்பு ..! பாஜகவுக்கு எதிர்ப்பு ..! திரிணமுல்,மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்
More News >>