மலையாள சினிமாவின் மகத்தான நடிகர் மோகன் லால் பிறந்த தினம்!

1980ம் ஆண்டு மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் துவங்கிய கலை பயணம் 300 படங்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் மலையாள சினிமா உலகின் மகத்தான நடிகர் லால் ஏட்டன் என செல்லமாக அழைக்கப்படும் மோகன் லாலின் 59வது பிறந்த தினம் இன்று.

40 ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவையே தன் வசம் வைத்துள்ள மோகன் லாலின் நடிப்பாற்றலை சொல்ல இன்று ஒரு நாள் போதாது. மலையாள சினிமா உலகில் மம்முட்டியும் மோகன் லாலும் போட்டி போட்டு நடிப்பில் அசத்தி தேசிய விருதுகளை குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

50 கோடி பாக்ஸ் ஆபிஸ் என்பதே பெரும் கனவாக இருந்த மலையாள சினிமா உலகை 100 கோடி பாக்ஸ் ஆபிஸுக்கு புலிமுருகன் படஹ்ட்தின் மூலம் கொண்டு சென்ற மோகன் லால், சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தின் மூலம் 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் படைத்துள்ளார்.

59வது பிறந்த நாளை கொண்டாடி வரும் லால் ஏட்டனுக்கு காப்பான் படக்குழு சார்பாக இயக்குநர் கே.வி.ஆனந்த் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார். நடிகை ராதிகா சரத்குமார், பிரித்விராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மோகன் லாலுக்கு ட்விட்டரில் பல ஹேஷ்டேகுகளை உருவாக்கி ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழைகளை தூவி ட்விட்டரில் டிரெண்டாக்கியும் கொண்டாடி வருகின்றனர். இன்னும் பல நல்ல படங்களை சினிமா உலகிற்கு தந்து மேலும் பல தேசிய விருதுகளை வெல்ல வாழ்த்துகிறோம்.

More News >>