காஜல் அகர்வாலிடம் கவர்ச்சிக்கு கட்டுப்பாடில்லை!
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் பல மொழிகளிலும் நாயகியாக நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக பாரீஸ் பாரீஸ் படம் காத்துக் கொண்டிருக்கிறது.
பல முறை ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போடப்பட்டுள்ளன. இதுவரை, எப்போது படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், காஜல் அகர்வாலுக்கு தற்போது அதுபற்றிய கவலை எல்லாம் ஒன்றும் கிடையாது.
ஜெயம் ரவியின் 24வது படமான கோமாளி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் உருவான சீதா படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால், தன்னை பற்றிய செய்திகள் ஹாட்டாக பரவ வேண்டும் என அடிக்கடி படுகவர்ச்சியாக கிளாமர் போட்டோ ஷூட்டும் நடத்தி, போட்டோஷூட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார் காஜல் அகர்வால்.
சமீபத்தில் சிகப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து படுகவர்ச்சியாக அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை ஆட்டி படைத்து வருகின்றன.
எல்லாம் சரி காஜல், இந்தியன் 2 படம் குறித்து ஏதாவது அப்டேட் வெளியிட்டால் நல்லா இருக்கும்!