ஈசியா செய்யலாம் வெங்காயம் பொடி ஊத்தாப்பம் ரெசிபி
சுவையான வெங்காயம் பொடி ஊத்தாப்பம், ரொம்ப சுலபமா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - ஒரு கிண்ணம்
பெரிய வெங்காயம் - 2
கொத்தமல்லி
இட்லி பொடி
உப்பு
செய்முறை:
முதலில் தோசை மாவில் உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
தற்போது, தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை ஊற்றி வார்க்கவும்.
இது தோசைப் போன்று பெரிதாக சுட வேண்டிய அவசியமில்லை. சிறிய அளவில் சுட்டால் போதும்.
அதன்மீது, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இட்லி பொடி என ஒவ்வொன்றாக தூவி இரண்டு பக்கமும் வேகவிடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான வெங்காயம் பொடி ஊத்தாப்பம் ரெடி..!