சத்து நிறைந்த வாழைப்பூ அடை ரெசிபி

சுவையான மற்றும் சத்து நிறைந்த வாழைப்பூ அடை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

வெங்காயம் - 1

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

பாசிப் பருப்பு - அரை கப்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

இட்லி அரிசி - ஒரு டம்ளர்

பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

முதலில், இட்லி அரிசியை பாத்திரத்தில் போட்டு, அத்துடன், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சேர்க்கவும்.

பின் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், தேவையான அளவில் தண்ணீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவில் சுத்தம் செய்த வாழைப்பூ, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தேவையான அளவு தண்ணீரையும், உப்பையும் சேர்த்து ஓரளவுக்கு கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

தவாவை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில், அடை மாவை தோசை போல் சிறிய வட்டமாக ஊற்றி மொறுமொறுவென சுட்டு எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான வாழைப்பூ அடை ருசிக்க தயார்..!

More News >>