மகாராஷ்ட்ராவில் ஒரு செல்லூர் ராணி காரின் வெப்பத்தை தணிக்க மாட்டு சாணி மேக்கப்!

அடிக்கிற வெயிலில் காருக்குள் ஏசி போட்டு அனைவரும் ஜாலியாக சென்றுக் கொண்டு இருக்கும் வேளையில், அந்த காரை வெப்பம் தாக்கக் கூடாது என மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஒரு பெண் செய்திருக்கும் பலே ஐடியா இணையதளத்தில் வைரலாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

மகாராஷ்ட்ராவை சேர்ந்த திருமதி ஷேஜல் ஷா என்பவர், 45 டிகிரி வெப்பத்தை தாங்க முடியாமல் தனது கார் முழுவதும் மாட்டுச் சாணத்தை அப்பி மொழுகி வைத்து கார் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு செய்வதன் மூலம் காரை வெப்பம் தாக்காது என்றும் கூலாக பயணம் செய்யலாம் என்பதும் அவரது கருத்து. அவரது இந்த ஐடியாவை படம்பிடித்து இணையதளத்தில் சிலர் வெளியிட, அந்த புகைப்படம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஆட்டோ மீது செடி கொடிகளை வளர்த்து சூட்டை தணித்து வந்த ஆட்டோ டிரைவர் பற்றிய செய்திகள் வைரலான நிலையில், தற்போது கார் முழுவதும் சாணத்தை அப்பி பயணம் மேற்கொள்ளும் ஷேஜல் ஷா குறித்த செய்தி வைரலாகி வருகிறது.

 

More News >>