3வது திருமணத்துக்கு ரெடியான அவெஞ்சர்ஸ் பட நாயகி!
ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது 3வது திருமணத்துக்கு தயாராகி உள்ளார். டிவி நடிகர் கோலின் ஜோன்ஸ் என்பவரை மணக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன். அவெஞ்சர்ஸ் படங்களில் பிளாக் விடோ எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். மேலும், இவர் நடிப்பில் வெளியான லூசி படமும் இவருக்கு உலகளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது.
டெட்பூல் நாயகன் ரியான் ரொனால்ட்ஸை கடந்த 2008ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஸ்கார்லெட், மூன்று ஆண்டு திருமண வாழ்விற்கு பிறகு, 2011ம் ஆண்டு திருமண வாழ்க்கை செட் ஆகவில்லை என விவாகரத்து செய்து கொண்டார்.
அதன் பின்னர் 2014ம் ஆண்டு ரொமைன் டாரியாக் எனும் பத்திரிகையாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரொமைன் டாரியாக்குடன் 2 குழந்தைகளை பெற்றுக் கொண்ட ஸ்கார்லெட் கடந்த 2017ம் ஆண்டில் இரண்டாவது கணவரான ரொமைன் டாரியாக்குடனும் விவாகரத்து செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது டிவி நடிகர் கோலின் ஜோன்ஸை காதலித்து வரும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.