மதிய உணவு ஸ்பெஷல் பிசிபேல்லாபாத் ரெசிபி

அனைவருக்கும் பிடித்த பிசிபேல்லாபாத் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப்

பருப்பு - அரை கப்

கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

சாம்பார் வெங்கயம் - 15

நறுக்கிய பீன்ஸ் - ஒரு கப்

நறுக்கிய கேரட் - ஒரு கப்

நறுக்கிய முள்ளங்கி - ஒரு கப்

பூண்டு - 10 பல்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

புளி - 1 எலுமிச்சைப்பழ அளவு

மிளகு - ஒரு டீஸ்பூன்

கிராம்பு - 4

பட்டை - 1

தனியா - 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

நெய்

எண்ணெய்

கொத்தமல்லித்தழை

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

குக்கரில் அரிசி, பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து சுமார் 10 விசில் வரும் வரை வேகவிடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், தனியா, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கிராம்பு, பட்டை, மிளகு சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து வைக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு சேர்த்து பொரிக்கவும். கூடவே, பூண்டு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

பின்னர், சின்ன வெங்காயம் முழுமையாக சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பிறகு, நறுக்கிய கேரட், பீன்ஸ், முள்ளங்கி, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

தற்போது, புளி கரைசல், உப்பு ஆகியவை காய்களுடன் சேர்த்து வேக வைக்கவும். பின்னர்குக்கரில், வேகவைத்த காய் கலவை, குழைந்த அரிசி பருப்பு சாதம், பொடி செய்த மசாலா சேர்த்து சுமார் 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான பிஸிபேல்லாபாத் ரெசிபி தயார்..!

More News >>