அடங்கிப் போனார் சந்திரபாபு! ஆந்திராவில் ஜெகன் ஆட்சி!!
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது. பா.ஜ.க. அல்லாத அரசு அமைப்பதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்த தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடங்கிப் போனார்.
ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் அங்கு நடைபெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டசபைத் தொகுதிகளில், காலை 11.30 மணி நிலவரப்படி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 149 இடங்களில் முன்னிலை வகித்தது. தெலுங்கு தேசம் வெறும் 26 தொகுதிகளில்தான் முன்னிலை பெற்றது. எனவே, அங்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் தலைமையில் ஆட்சி அமையப் போவது உறுதியானது. தோல்வியை ஏற்று சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
அம்மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 25 தொகுதிகளிலுமே முன்னிலை வகிக்கிறது. ஒரே தொகுதியில் தெலுங்குதேசம் முன்னிலை வகிக்கிறது.