5 சுற்றில் 50 ஆயிரம் வித்தியாசம் ... தூத்துக்குடியில் அம்போவான தமிழிசை... கனிமொழி அமோகம்!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் பாஜக தலைவர் தமிழிசையைக் காட்டிலும் மூன்று மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னேறுகிறார். அபார வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் ஆரம்பத்திலேயே தோல்வி உறுதி என்று தெரிந்தும் கனிமொழியை எதிர்த்து தமிழிசை களத்தில் குதித்தார். தாமரை மலர்ந்தே தீரும், கடலிலும் தாமரை மலரும் என்று அசராமல் உரத்த குரலில் பிரச்சாரம் செய்தார். எப்படியும் வெற்றி பெறுவேன் என்று கெத்து காட்டிய தமிழிசைக்கு கிடைத்து வரும் வாக்குகளோ மிகப் பரிதாபமாக உள்ளது.

5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முன்னணி நிலவரம் இதோ:

கனிமொழி (திமுக) - 76492தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) - 25715

மொத்தம் 50,777 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.

இதே போல் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா ஆகியோரும் படு மோசமான தோல்வியை தழுவுகின்றனர்.

More News >>