மன்மோகன், ஜெகன்மோகனுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு!
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகனுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே அ.தி.மு.க. வென்றது. மீதி 37 தொகுதிகளிலுமே தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் தி.மு.க. அணி அமோக வெற்றி பெற்றதற்காக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதே போல், ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.