துரியோதனனை ஹீரோவாக்கிய கன்னட மகாபாரத படம்!
மகாபாரதகதையை திரைப்படமாக்க பாலிவுட்டில் அமீர்கானும், தெலுங்கில் ராஜமெளலியும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கன்னடத்தில் அதிக பட்ஜெட் செலவில் குருக்ஷேத்ரா என்ற பெயரில் மகாபாரத கதை கொண்ட திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில், கன்னட ஹீரோ தர்ஷன் துரியோதனாக நடித்துள்ளார். துரியோதனின் நண்பன் கர்ணனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். மேலும், திரவுபதியாக ஸ்நேகா நடித்துள்ளார்.
மகாபாரத கதையின் முக்கிய கதாபாத்திரமான கிருஷ்ண கதாபாத்திரத்தில் வி. ரவிச்சந்திரனும், பீஷ்மராக அம்பரீஷும் நடித்துள்ளனர். தர்ஷன் நாயகனாக துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், அவருக்கு வில்லனான அர்ஜுன் கதாபாத்திரத்தில் வில்லன் நடிகர் சோனு சூட் நடித்துள்ளார்.
மேலும் ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராவணனை நாயகனாக வைத்து சில படங்கள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது, துரியோதனனை நாயகனாக வைத்தும் ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது.