அமலா பாலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பால், மைனா படத்தின் மூலம் பலரது பாராட்டுக்களை பெற்று முன்னணி நடிகையானார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால், அவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதின் விளைவாக விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர், அமலா பால், தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோ அந்த பறவை போல, ஆடை போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கின்றது.
அவ்வப்போது படுகவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நடிகை அமலா பால், எப்போதும் தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்.
இதற்கு அவர் செய்யும் விஷயம் என்ன தெரியுமா? யோகா தான். தினமும் தவாறமல் யோகா செய்து வரும் அமலா பால், தனது உடலை ரப்பர் போல வளைத்து செய்யும் ஆசனங்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.