ஒரு வாரச் சரிவிலிருந்து மீண்ட இந்தியப் பங்குச்சந்தை

கடந்த ஒரு வார காலமாக சரிவில் தவித்துவந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

உலக அளவில் நீடித்திருக்கும் பொருளாதார நிலையில்லாத் தன்மை, இந்திய அரசியல் சூழல், இந்தியப் பொருளாதாரம், புதிய பட்ஜெட் தாக்கல் இவையனைத்தும் ஒரே நேர்கோட்டில் சேர கடந்த சில மாத காலமாக வளர்ந்து வந்த இந்தியப் பங்குச்சந்தை அதள பாதாளத்தில் வீழ்ந்தது. இதனால் உலகளாவிய வர்த்தகத்திலும் இந்தியப் பொருளாதார நிலை வீழ்ந்தே கிடந்தது.

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330.45 புள்ளிகள் உயர்ந்து 34,413 புள்ளிகளாக நிறைவடைந்தது. மேலும் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.15 உயர்ந்து 10,576 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது.

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்படுத்திய தாக்கங்களை மீறியும் இன்றைய தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தை உச்சத்தை அடைந்துள்ளது முதலீட்டாளர்களையும் வர்த்தகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More News >>