சுவையான இளநீர் பாயாசம் ரெசிபி

கேரள ஸ்பெஷல் இளநீர் பாயாசம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கொழுப்பு நிறைந்த பால் - ஒரு தம்ளர்

தேங்காய்ப் பால் - ஓரு தம்ளர்

இளநீர் - அரை தம்ளர்

இளநீர் வழுக்கை - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

சர்க்கரை

செய்முறை:

முதலில், இளநீர் வழுக்கையை மிக்ஸி ஜாரீல் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், பால் ஊற்றி நன்றாக காய வைக்கவும்.

பிறகு, சர்க்கரை சேர்த்து நன்றாக கரைய வைக்கவும்.

பின்னர், அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

கூடவே, தேக்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.

இறுதியாக, இளநீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

இதன்மீது, பொடியாக நறுக்கி, வறுத்த முந்திரி, பாதாம் தூவி பரிமாறவும்.சுவையான இளநீர் பாயாசம் ரெடி..!

More News >>