குழந்தைகள் விரும்பி பருகும் தேங்காய் பால் பாயாசம்
குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் பால் பாயாசம் செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
பச்சரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
காய்ந்த திராட்சை - 10
செய்முறை:
முதலில், மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து அத்துடன் வெந்நீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வெல்லம் சேர்த்து கரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
தற்போது, தேங்காய் பாலுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
அதனுடன், வடிகட்டிய வெல்லம் சேர்த்து இந்த கலவையை அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறுக்கவும்.
இறுதியாக, கடாயில் நெய்விட்டு சூடானதும் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பாயாசத்துடன் சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய் பால் பாயாசம் ரெடி..!