ஈசியா செய்யலாம் அரிசி புட்டு ரெசிபி
வீட்டிலேயே சுலபமா செய்யக்கூடிய அரிசி புட்டு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
அரிசி - 200 கிராம்
செய்முறை:
முதலில், அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிறகு, ஒரு துணியில் அரிசியை போட்டு பரப்பி உலர்த்தவும். இதையடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவை, ஒரு வாணலியில் போட்டு மிதமான சூட்டில் சுமார் 10 நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ளவும்.
பின்னர், இந்த மாவை ஒரு கிண்ணத்தில்போட்டு, அதனுடன் உப்பு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர், இதனை புட்டு குழாயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான அரிசி புட்டு ரெடி..! இந்த ரெசிபிக்கு காரசாரமான கொண்டைக்கடலை மசாலா கிரேவி தொட்டு சாப்பிடலாம். அல்லது, சர்க்கரையுடனும் சாப்பிடலாம்.