நாளை தாயிடம் ஆசி! மறுநாள் காசியில்!!
பிரதமர் நரேந்திர மோடி நாளை(மே 26) குஜராத் சென்று தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெறுகிறார். மறுநாள், காசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அணி 352 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. வாரணாசி தொகுதியில் மோடி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி :
எனது தாயிடம் ஆசி பெறுவதற்காக, நாளை மாலை குஜராத் செல்கிறேன். நாளை மறுநாள் காலையில், காசிக்கு சென்று என் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.