ஹிப் ஹாப் ஆதி வெளியிட்ட கலகலப்பு 2 பாடலுக்கு குவுயும் லைக்ஸ்.. (வீடியோ)
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு, விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘கலகலப்பு’. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கலகலப்பு&2 படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, மிர்ச்சி சிவா, வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படம் நாளை ரிலீசாகவுள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிருஷ்ணா முகுந்தா’ என்ற பாடலை ஹிப் ஹாப் தமிழா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே லைக்ஸ்களை குவித்து வருகிறது.