சுவையான மதிய உணவு மாங்காய் புலாவ் சாதம் ரெசிபி
சூப்பர் லன்ச் ரெசிபியான மாங்காய் புலாவ் சாதம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 3 கப்
மாங்காய் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பிரியாணி இலை - 2
நட்சத்திர சோம்பு - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 1
பட்டை - 2
பச்சை மிளகாய் - 4
பட்டாணி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
புதினா - தேவையான அளவு
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - நான்கரை கப்
கொத்தமல்லித்தழை
நெய் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
முதலில், மாங்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர், தக்காளி சேர்த்து வேகவிடவும். கூடவே, பச்சை பட்டாணி, புதினா சேர்த்து வதக்கவும்.
இந்நிலையில், வெட்டி வைத்த மாங்காய்யை சேர்த்து மிதமாக வதக்கவும்.அத்துடன், கரம் மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பட்டாணி அரை வேக்காடாக வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.கொதிவந்ததும், தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை கழுது அத்துடன் சேர்க்கவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தூவி கிளறி இறக்கினால் சுவையான மாங்காய் புவால் சாதம் ரெடி..!