ஓட்டல் ஸ்டைலில் முட்டைகோஸ் கூட்டு

வீட்டிலேயே ஓட்டல் ஸ்டைலில் முட்டைகோஸ் கூட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் - 200 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்

பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

பொட்டு கடலை - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

பெங்காயம் - ஒரு சிறிய துண்டு

காய்ந்த மிளகாய் - 2

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

குக்கரில், கடலை பருப்பு , பாசிப்பருப்பு, நறுக்கிய முட்டை கோஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி, உப்பு, அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

இதற்கிடையே, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பொட்டு கடலை, சீரகம் சேர்த்து மிக்ஸி ஜாரில் மையாக அரைத்துக் கொள்ளவும்.

முட்டைகோஸ், பருப்பு கலவை நன்றாக வெந்ததும், அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்.

வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம் சேர்த்து தாளித்து கலவையில் கொட்டி கிளறவும்.

இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி கிளறினால் சுவையான முட்டைகோஸ் கூட்டு ரெடி..!

More News >>